மண்சரிவுக்கு உள்ளான பதுளை, கொஸ்லந்த, மீரியாபெத்த கிராமம், அபாயப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் ஐந்தாவது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்ட மீட்புப் பணிகளின் போது, சுமார் 25 முதல் 30 அடி ஆழத்திலிருந்து இந்த சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில், மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களில் 6 சடலங்கள் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எவ்வாறாயினும், மீரியாபெத்த மண்சரிவில் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலை தோன்றுவதாகவும் அச்சடலங்களை சரியாக அடையாளம் காண வேண்டுமாயின் அவற்றை குளிரூட்டப்பட்ட நிலையில் பாதுகாப்பது அவசியம் எனவும் விசேட சட்ட வைத்திய அதிகாரி எச்.டி.கே.வி.விஜயவீர தெரிவித்துள்ளார்.