Breaking
Tue. Dec 24th, 2024

-முர்ஷிட் முஹம்மத்-

மறைந்த பெருந்தலைவர் அஷ்ரபின் கனவுகளுடன் நாளைய தலைவர்களை உருவாக்கும் பயணத்தில், நிந்தவூர் வன்னியார் வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் மயில் சின்னத்தில் களமிறங்கியிருக்கும் பொறியியலாளர் ஆதம்பாவா வாக்கிர் ஹுசைனின் தேர்தல் காரியாலய திறப்புவிழா நேற்று முன்தினம் (03)   ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ஹசனலி தலைமையில் இடம்பெற்றது.

“நாங்கள் முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிரானவர்கள் அல்ல, அதுவே முஸ்லிம் சமூகத்தின் அனைத்து கட்சிகளுக்கும் தாய்க்கட்சி. ஆனால் அந்தக் கட்சியையும், அதனூடாக நமது சமூகத்தையும் தவறான வழியின்பால் இட்டுச்செல்லும் ஹக்கீம் எனும் தலைமையையே,  நாம் எதிர்த்துக் கேள்வி கேட்கிறோம்” என்று வன்னியார் நகர வேட்பாளர் ஆதம்வாபா வாக்கிர் ஹுசைன் தெரிவித்தார்.

முன்னாள் பிரதேச சபை தவிசாளரும், முதன்மை வேட்பாளருமான எம்.ஏ.எம்.தாஹிர்  “அநியாயக்காரன் ஹக்கீமிடம் இருந்து இந்த சமூகத்தைக் காப்பாற்றுங்கள்” என்று மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

கூட்டமைப்பின் தலைவர் எம்.ரீ.ஹசன் அலி பேசும்போது “மறைந்த பெருந்தலைவரின் யாப்பே, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் யாப்பு. தலைவர் விட்டுச்சென்ற இடத்திலிருந்து நாங்கள் தொடர்கின்றோம்” என்று கூறினார்.

இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக நிந்தவூர் பிரதேச சபைக்கு போட்டியிடும் தலைமை வேட்பாளரும், முன்னாள் தவிசாளருமான எம்.ஏ.எம்.தாஹீர் (அஸ்ரப்) உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் மற்றும் பெருந்திரளான மக்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related Post