பதுளை கொஸ்லாந்தை – மீறியபெத்தை தோட்ட மண்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கிறது.
இந்நிலையில் இன்றும் இரண்டு சடலம் மீட்கப்பட்டுள்ளது அதன்படி மண்ணுக்குள் புதையுண்ட 7 பேரின் சடலம் இதுவரை மீட்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் சீரற்ற காலநிலையால் மீட்பு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. எனினும் மழையுடன் கூடிய காலநிலையால் மீட்பு பணிகள் தாமதமடைந்துள்ளன.
இதேவேளை மீறியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈரான் அரசாங்கம் அனுதாபம் தெரிவித்துள்ளது.
மண்சரிவில் உயிரிழந்த, காணால் போனவர்களின் குடும்பங்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மர்சி அப்கஹம் கவலையை தெரிவித்துள்ளார்.