முச்சக்கர வண்டி சாரதி ஒருவரிடமிருந்து 7000 ரூபாவை லஞ்சம் பெற்றுக் கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தானை மோட்டார் போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றச் செயல் ஒன்று தொடர்பில் வழக்குத் தொடராமல் இருப்பதற்காக இவ்வாறு லஞ்சமாக 7000 ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்டதாக அரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் லஞ்ச ஊழல் தவிர்ப்பு விசாரணைப் பிரிவினரும் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.