Breaking
Tue. Dec 24th, 2024

-ஊடகப்பிரிவு-

கண்டி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பளிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேச சபை மற்றும் உடுநுவர பிரதேச சபை ஆகியவற்றில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்குரணை, உடுநுவர பிரதேச சபைக்குட்பட்ட வட்டாரங்களில் நேற்று (05) தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இடம்பெற்றன.

அக்குரணை பிரதேச சபைக்குட்பட்ட உக்கல்ல வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் அனீஸ் மற்றும் நீரல்ல வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் ரம்ஸான் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றன.

இந்தக் கூட்டங்களில் மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட இணைப்பாளரும், லக்ஸல நிறுவனத்தின் பணிப்பாளருமான ரியாஸ் இஸ்ஸதீன், கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாட், அக்குரணை மக்கள் காங்கிரஸ் கிளையின் தலைவர் உமர் கஸ்ஸாலி, பிரதித் தலைவர் ரிஸ்வி ஜே.பி மற்றும்  வேட்பாளர்களான பஹ்மி, ஸப்ரான், ஹமீத் ஏ காதார் ஆத்தாஸ் ஆகியோர் உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும், கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

இதேவேளை உடபலாத்த பிரதேச சபைக்குட்பட்ட எகொட களுகமுவ வட்டாரத்திலும், உடுநுவர பிரதேச சபைக்குட்பட்ட படுபிடிய வட்டாரத்திலும், மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related Post