இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு விற்கு ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண் டிய கால எல்லை முடிவடைந்துள்ள போதிலும் காலம் பிந்தி சமர்ப்பிக் கப்படுபவற்றை ஏற்றுக்கொள்ள தயார் என மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் களின்படி, ஒக்டோபர் 30 திகதி யுடன் ஆதாரங்கள் போன்றவற்றை சமர்ப் பிக்க வேண்டும்.தனக்கு கிடைத்த தகவல்களை குழு ஆராய்வதற்கு இலகுவாகவே இந்த கால எல்லை வகுக்கப்பட்டுள்ளது.
ஆதன்பின்னர் அடுத்த இரண்டு மாதத்திற்க்குள் விசாரணை குழு தனது அறிக்கையை தயாரித்து மார்ச்மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குவின் அமர்வின் முன்னிலையில் சமர்ப்பிக்கவேண்டும்.
உத்தியோக பூர்வமாக காலக்கெடு, ஒக்டோபர் 30 திகதியுடன் முடிவடைந்துள்ளது, இதனை நாங்கள் நீடிக்கமாட்டோம்,அதேவேளை, சில ஆவணங்கள் வந்து சேர்வதற்கு தாமதமாகும் என்பது எமக்கு தெரியும்,அவ்வாறு தாமதமாக வருபவற்றை நிராகரிக்க மாட்டோம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலக பேச்சாளர் ருபேர்ட் கொல்வில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இரு தரப்பும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள், துஸ்பிரயோகங்கள், குற்றச்செயல்கள்,போன்றவற்றை ஆராய்ந்து உறுதிப்படுத்துவதற்காக, இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் விசாரணை குழு ஆவணங்கள், தகவல்கள் போன்;றவற்றை ஆராயுவுள்ளது.