(நேர்காணல் – எம்.ரீ.எம்.பாரிஸ்)
ஓட்டமாவடி பிரதேச சபையின் 43வது சபை அமர்வு கடந்த ஓக்டோபர் 30.2014ந்திகதி நடை பெற இருத்த நிலையில் சபை உறுப்பினர்களால் பகிஷ்கரிக்கப்பட்டது இது தொடர்பிலும் அடுத்த தவிசாளர் யார்? என்ற கேள்விக்கு பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர் இவ்வாறு ஊடகங்களுக்கு பதில் அளித்தார்
தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் அவர்கள் மீது பிரதேச சபை உறுப்பினர்களால் பல்வேறு குற்றங்கள் சுமர்தப்பட்ட இந்நிலையில் தவிசாளருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரோரனையினை கொண்டு வருவதன் மூலம் தவிசாளரை மாற்றி புதிய தவிசாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த உப தவிசாளர் ‘தவிசாளர் மீது சுமர்தப்பட்ட குற்றங்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் தவிசாளருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நம்பிக்கையில்லா பிரோரனையினைக்கு நான் ஆதரவு வழங்குவேன் ஆனால் தவிசாளருக்கு அடுத்த பதவியில் இருக்கும் உப தவிசாளராகிய நான் தவிசாளர் பதவியை ஏற்பதற்கு எனக்கு உடன்பாடு கிடையாது பெரும் தொகையான மக்களின் வாக்குகளின் அடிப்படையிலேயே தவிசாளராக கௌரவ தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் தேர்வு செய்யப்பட்டார.; அவருக்கு அடுத்ததாக நான் மக்களின் பெருமளவான வாக்குகளை பெற்று உப தவிசாளராக தேர்வு செய்யப்பட்டேன் மேலும் சந்தர்ப்பம் பார்த்து அரசியல் செய்பவன் நான் அல்ல என்றும் எனது மக்கள் என் கூடவே இருக்கின்றனர்.
எமது பிரதேச சபையின் ஆட்சிகாலம் முடிவடைவதற்கு சில மாதங்கள் இருக்கும் நிலையில் தவிசாளர் மீது சுமர்த்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் எனக்கு அடுத்ததாகவுள்ள உறுப்பினரை நியமிப்பதற்கு நான் உடன்படுவேன்.
மேலும் எமது நாட்டு மக்கள் நடக்க விருக்கும் ஜனாதிபதி தேர்தலை எதிர்பார்த வண்னம் இருக்கும் நிலையில் அரசாங்கத்திற்கு ஆதரவாகவுள்ள எமது பிரதேச சபையில் இவ்வாறானதொரு பிரச்சினையை பூதாகாரமாக மாறி செல்ல இடமளிக்காமல் முறையாக பேசி இவ்விடயத்தில் அக்கரை செலுத்தி மக்கள் நன்மைக்காக சபை சிறப்பாக செயற்படுவதற்கு அதரவு வழங்குமாறு தவிசாளர் உற்பட அனைத்து சபை உறுப்பினர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என பதில் அளித்தார்.