Breaking
Sat. Jan 11th, 2025
இலங்கையில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ரான்கீன், கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
மத ஐக்கியம் மற்றும் இலங்கையின் ஏனைய விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையில் மத நல்லிணக்கம் அவசியமானது என்ற பிரித்தானிய  அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே அஸ்கிரி மல்வத்து பீடாதிபதிகளும் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அலுத்கமவில் சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவத்தை பாடமாகக் கொண்டு செயற்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
குரோதத்தை தூண்டக் கூடிய பேச்சுக்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டமைக்காக எவரும் கவலைப்படத் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு ஆதரவளிக்கவே பிரித்தானிய விரும்புகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி வரவேற்கப்பட வேண்டியது எனஅவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முழு அளவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதே பிரித்தானியாவின் நிலைப்பாடாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச்செயல்களுக்கு தண்டனை விதித்தல், மனித உரிமைகளை மேம்படுத்தல் மற்றும் அரசியல் ரீதியான தீர்வுத் திட்டம் ஒன்றை எட்டுதல் போன்றவற்றின் ஊடாக முழு அளவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post