Breaking
Thu. Dec 26th, 2024

-ஊடகப்பிரிவு-

நமது சமூகம் இன்று ஒரு போட்டிமிக்க தேர்தலை எதிர்கொண்டுள்ளது. இதை நாம் நமக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்புடைமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனைப் போன்று, சமூகத்தை நேசிக்கும் அனைவருக்கும் உள்ள மிகப்பெரியா கடமையாகும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நஸீர் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இன்றைக்கு 71 வருட வரலாற்றை ஐக்கிய தேசிய கட்சி எழுதி முடித்துவிட்டது. நான் பல வருடங்களாக ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக்காக உழைத்திருக்கின்றேன். பல தடவை எனது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கடினமாக போராடியிருக்கின்றேன். ஆனால், நாம் பல தடவைகள் ஏமாற்றப்பட்டோம். இன்றும் ஏமாற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம்.

நமது கிராமங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து கண்ட அபிவிருத்திதான் என்ன? இன்று அதிகமான சிங்கள கிராமங்களையும், சிங்கள பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்யமுடியுமாக இருந்தால், ஏன் எமது படசாலைகளை கல்வி நிருவனங்களை அவர்களினால் அபிவிருத்தி செய்ய முடியாது ?

அன்று நமது சமூகத்துக்காக எதையும் செய்யாதவர்கள், நான் அமைச்சர் ரிஷாட் பதீயுதீனுடன் இனைந்தவுடன் என்னை மீண்டும் அழைக்கின்றார்கள்.  உங்களுக்கு எதை வேண்டுமானாலும்  செய்து தருகின்றோ.ம் என்னால் முடியாது என்றவுடன் இந்த தேர்தலில் புதியவர்களை புதிய முறையில் ஏமாற்றுவேன் என்று என்னிடம் கூறியதை, நான் மீண்டும் இந்த சமூகத்துக்கு ஞாபகப்படுத்த வேண்டிய கட்டாயத்திலிருக்கின்றேன்.

நமது வாக்குகளை பெற்றுக் கொண்டு ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் இருப்பவர்களினால் ஏன் அன்று ஜின்தோட்டையில் நடந்த இழப்புகளை ஈடு செய்ய முடியவில்லை? நமது அரசாங்கம் வந்தால் முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து சக்திகளையும் நாம் வழங்குவோம் என்று வாக்களித்தவர்கள் எங்கே? இது வரை அழுத்கமையில் நமது சமூகம் இழந்த சொத்துக்களை இன்னும் இவர்கள் கொடுக்கவில்லை இது ஏன்?

உண்மையில் நாம் ஏமாற்றப்படுகின்றோம். அதனால் தான் நான் இன்று எமக்காக எமது சமூகத்துக்காக குரல் கொடுக்கக் கூடிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களுடன் இனைந்திருக்கின்றேன். அவரின் கட்சியை வெற்றிபெறச்செய்வது சமூகத்தை நேசிக்கின்ற அத்தனை கலிமாச் சொன்ன முஸ்லிம் மக்களினதும் கடமையாகும் என தெரிவித்தார்.

மேலும், நாளை நாம் ஐக்கிய தேசிய கட்சிக்கு அள்ளிக்கொடுக்கும் வாக்குகள் மூலம் எம்மால் அனுப்பப்படுகின்ற பிரதிநிதிகள் தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றீர்களா? அப்படியானால் நீங்கள் இந்த சமூகத்துக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்யப்போகின்றீர்கள். அல்லாஹ்வை பயந்து உங்களுடைய வாக்குகளை அளிக்கத் தயாராகுங்கள்.

நமது முஸ்லிம் கிராமங்கள் இரட்டை வட்டாரமாக பிறிக்கப்பட வேண்டும். ஏன் இந்த மக்களுக்கு அநியாயம் செய்கின்றீர்கள்? என எமது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மட்டுமே அன்று பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார். ஆனால், அவர்களின் குரல் நசுக்கப்பட்டது. அது ஏன் தெரியுமா? அவருக்கு குருநாகல் மாவட்டத்தில் எந்தப்பிரதிநிதியும் இல்லை என்பதால் மட்டுமே.

நாம் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை பலப்படுத்த வேண்டும்.  அவ்வாறு பலப்படுத்தினால் மட்டுமே நமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். எனவே, வருகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மயில் சின்னத்துக்கு வாக்களித்து, நமது சமூகத்தின் வெற்றியை உறுதி செய்து கொள்ளுங்கள் எனத் தெரிவித்தார்.

Related Post