ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவிலிருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த கப்பலொன்று மூழ்கியதால் குறைந்தபட்சம் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கியின் இஸ்தான்புல் கரையோரத்துக்கு அப்பாலான கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை இக்கப்பல் மூழ்கியுள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீன்பிடிப் படகுகள் மற்றும் கடற்படைக் கப்பல்களின் உதவியுடன் சுழியோடிகள் 06 பேரை காப்பாற்றியுள்ளனர். இதன்போது, எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர் என்பது தொடர்பில் தெரியவரவில்லை.
இக்கப்பலில் சுமார் 40 பேர் இருந்துள்ளதுடன், இவர்களில் அதிகளவான சிறுவர்கள் இருந்துள்ளதாகவும் நம்பப்படுகின்றது