பிரான்ஸில் உள்ள மருந்து நிறுவனம் கண்டுபிடித்த டெங்கு காய்ச்சலுக்கான மருந்து வெற்றியடைந்து உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டெங்கு காய்ச்சலுக்கு எந்தவித மருந்துமின்றி உயிரிழப்பு அதிகம் நேர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்தான் உலகம் முழுக்க கொசுக்களால் உண்டாகும் டெங்கு காய்ச்சலுக்கு ஃபிரான்ஸ் மருந்து நிறுவனம் ஒன்று டெங்கு மருந்து கண்டுப்பிடித்து உள்ளது. இந்த நிறுவனம் கண்டுப்பிடித்த மருந்து சக்சஸ் ஆகியதைத் தொடர்ந்து 18 வயது முதல் 45 வயது வரையிலானவர்களுக்கு இந்த மருந்தைக் கொடுத்து பரிசோதனை செய்துப் பார்த்ததில் அவர்கள் பூரண குணம் அடைந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்தும் இந்த மருந்து அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.