Breaking
Sat. Jan 11th, 2025

இலங்கை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஐ.நா விசாரணைக் குழு, எழுத்துமூல சாட்சி விசாரணைகளை நிறைவுசெய்துள்ளதாக சட்டத்தரணி கலாநிதி பிரதீப மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைகளில் முக்கியத்துவம் வாய்ந்த, பொதுமக்களின் சாட்சியங்களை பெற்றுக்கொள்ள பல்வேறு அமைப்புக்கள் உதவி புரிந்துள்ளதால், இந்த விடயத்தில் அதிகளவிலான அழுத்தங்கள் நாட்டிற்கு ஏற்படக்கூடும்.

எழுத்துமூல மற்றும் வாய்மூல சாட்சியங்கள் தற்போது பதிவுசெய்யப்பட்டுள்ளதால் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் அறிக்கை தயாரிக்கப்பட்டு, பெப்ரவரி மாத இறுதியில் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும்

மனித உரிமைகள் பேரவை இறுதித் தீர்மானம் எடுப்பதற்கான பொறுப்பை ஐ.நா பாதுகாப்பு பேரவைக்கு வழங்கும் சாத்தியங்கள் காணப்படுகிறது. பாதுகாப்பு பேரவையில் ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக, விஷேட அதிகாரத்தை பயன்படுத்தலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post