Breaking
Sat. Jan 11th, 2025

சீனாவின் தென் மேற்கில் உள்ள சாங்கிங் நகரில் லேகெலுடு என்ற இடத்தில் கேளிக்கை பூங்கா உள்ளது. அங்கு 8 வயது சிறுமி தனது உறவினர்களுடன் சென்று இருந்தாள்.

பல இடங்களுக்கு சென்ற அவர்கள் அங்கு நடந்த சர்க்கசை பார்க்க சென்றனர். அவர்களுடன் சிறுமியும் சென்று இருந்தாள்.

அப்போது அங்கு புலிக்கு பயிற்சி அளித்து கொண்டிருந்தனர். அதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த சிறுமி புலி நடமாடிய பகுதிக்குள் தவறி விழுந்தாள்.

உடனே அவளை அந்த புலி பாய்ந்து கடித்து குதறியது. இதனால் படுகாயம் அடைந்த சிறுமியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவள் பரிதாபமாக இறந்தாள்.

இச்சம்பவம், சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Related Post