-சப்னி அஹமட்-
போலியான குற்றச்சாட்டுக்களை நான் கூறுகின்றேன் என மேடைகளில் கூறித்திரியும் முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், கட்சிசார்ந்த எவராக இருந்தாலும் முடிந்தால் என்னுடன் நேரடி விவாதத்திற்கு வருமாறு முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ அன்ஸில் சவால் விடுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக பாலமுனையில் நடைபெற்ற மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (17) இடம்பெற்ற போதே, இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,
கடந்த காலங்களில் நான் பல மேடைகளில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொள்ளைகள் தொடர்பாகவும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மீதும், அக்கட்சி சார்ந்தவர்கள் மீதும் என்னால் பல குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டதை அனைவரும் அறிந்ததே, குறித்த குற்றச்சாட்டுக்களை நான் பொய்யாக புணைந்து கூறுகின்றேன் என்றால் உங்களால் முடிந்தால் இல்லை எனக்கூறுங்கள் அல்லது என்னுடன் நேரடியாக விவாதத்திற்குமாறு இக்கட்சியின் தற்போதைய தலைவரையும், கட்சி சார்ந்த எவராக இருந்தாலும் மக்கள் முன் வருமாறு பகிரங்கமாக அழைக்கின்றேன். இது தொடர்பில் பாலமுனை பிரதேசத்தில் உள்ள பள்ளிவாயலோ அல்லது இப்பிரதேத்தில் உள்ள எவ்வாறான பொது அமைப்புக்களே இதை ஏற்பாடு செய்து தருமாறு பகிரங்காக கோரியுள்ளார்.
நான் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை மீதும், அக்கட்சியில் நடைபெற்ற அநியாயங்கள் தொடர்பாக மிகத்தெளிவான ஆதரங்களை கையில் வைத்துக்கொண்டு பேசி வருகின்றேன், இவ் ஆதாரங்களுக்கு நான் மாத்திரம் சாட்சியில்லை இக்கட்சியில் இருந்த பலர் சாட்சியாக இருக்கின்றார்கள். ஆகவே நான் கூறுவது பொய்யாக இருக்குமா..?? அல்லது இக்கூற்றுக்களை என்னால் உருவாக்கப்பட்டு பேசப்பட்டதா..?? உண்மையை மிகத்தெளிவான முறையில் மக்களுக்கு வெளிக்கொண்டு வருகின்றேன். ஆகவே இக்கட்சியில் உள்ள எவராக இருந்தாலும் சரி என்னுடன் விவாதிக்க தயாராக இருந்தால் உடனடியாக கூறுமாறு கேட்டுக்கொண்டார்.
அதுபோல், என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருந்தால் அது தொடர்பில் விவாதிக்கவும் நான் தயாராக உள்ளேன், அவ்வாறான விவாதங்களை ஏற்பாடு செய்து என் மீது உள்ள குற்றாச்சாட்டை ஆதாரபூர்வமாக நிரூபிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். கடந்த காலங்களில் சின்னப்பாலமுனை இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் எம் மீது ஆதாரமற்ற போலியான பல குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டது அது தொடர்பில் விசாரிக்குமாறு பள்ளிவாயலுக்கு பகிரங்கமாக கடிதம் கொடுத்தேன் அது போலிக்குற்றாச்சாட்டு எனக்கூறி அதை விசாரிக்காமல் விட்டார்கள்.
நான் சென்ற நாட்களில் முஸ்லிம் காங்கிரஸின் கூட்டத்தில் ஹக்கீம் கலந்துகொண்டால் அக்கூட்ட முன்வரிசையில் நானும் அமர்வேன் எனக் கூறிமைக்கு அமைவாக ஹக்கீமின் பாலமுனைக்கூட்டத்திற்கு நானும் உள்நுழைய சென்ற போது என்னை தடுத்து பிரச்சினைகளை உண்டுபன்னினார்கள் தவிர கூட்டத்தை குழப்புவதற்காக நான் அங்கு செல்லவில்லை. பாலமுனைக்கூட்டத்திற்கு வந்தவர்கள் மீது கல் வீசப்பட்டதாக என் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது எனக்கு வன்முறைகளை உருவாக்குக் நோக்கம் அல்ல இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வேறு நபர்கள் அசம்பாவிதங்களை மேற்கொண்டிருக்கலாம்.
நான் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை 04 வகையாக பிரித்து அதற்கு பதில் வழங்கும் நோக்கில் கதைகளையும் பதில்களை மிகத்தெளிவான முறையில் மழுப்பி சென்றதை அனைவரும் அவதானிக்க முடிந்தது அத்துடன் குறித்த குற்றச்சாட்டுக்களில் அவர்சார்ந்த குற்றச்சாட்டுக்களை முழுமையாக இணைக்காமல் மிகத்தெளிவாக ரத்து செய்து சென்றதும் குறிப்பிடத்தக்கது.