-ஊடகப்பிரிவு-
ஜவுளி மற்றும் ஆடைத்துறையில் இலங்கை மிகவும் உச்ச நிலையில் உள்ளது. இலங்கை கைத்தொழில்துறையில் முன்னணி வகிப்பது ஆடைத்தொழிலாகும். திறந்த பொருளாதார கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின் ஆடை தொடர்பாக இலங்கை பிரதான நாடாகியது. இலங்கையின் ஆடைகள் தரமானதால் வெளிநாட்டுச் சந்தை வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது. கடந்த தசாப்தங்களில் இலங்கையின் ஆடைகளுக்கு ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளில் பெரும் கேள்வி காணப்பட்டது. 2016 ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் (2017) எமது ஆடைகள் வருமானம் அதிகரித்துள்ளது. அவ்வாண்டு காலப்பகுதியில் இலங்கையின் மொத்த ஆடை ஏற்றுமதியானது 4.3 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அண்மையில் கொழும்பு 02 இல் அமைந்துள்ள லங்கா கண்காட்சி மற்றும் மாநாடு சேவைகள் நிறுவனத்தில் இடம்பெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான ஒன்பதாவது ஆடை தொழிற்துறை விநியோக கண்காட்சியின் அங்குரார்ப்பண விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷா டி சில்வா, கூட்டு ஆடை சங்கம் மன்ற பேரவையின் தலைவர் ஷாராட் அமலீன், லங்கா கண்காட்சி மற்றும் மாநாடு சேவைகள் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அர்ஜுன் தர்மதாச மற்றும் ஹேயரிங் முதலீட்டு சர்வதேச பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டாக்டர் பாலித கோஹோன ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
தொடர்ந்து இந்நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்களின் தகவலுக்கிணங்க கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை (2017) ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த ஆடை ஏற்றுமதி 4.366 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது 2016 ஆம் ஆண்டை விட 4.3 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. ஆகவே, 2017 ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 2016 ஆம் ஆண்டை விட மிக அதிகமாக 4.7 பில்லியன் டொலர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். 2017 ஆம் ஆண்டுக்கான மாதாந்த ஆடை ஏற்றுமதி 406 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 364 மில்லியன் அமெரிக்க டொலர்களுடனான 11மூ சதவீத அதிகரிப்பை காட்டுகின்றது.
வருடாந்த அனைத்து பொருட்களின் மொத்த ஏற்றுமதிகளில் ஜவுளி மற்றும் ஆடை கிட்டத்தட்ட அரைவாசியாகும். எங்களது மிகப் பெரிய 42 சத வீத ஆடை ஏற்றுமதி சந்தை அமெரிக்கா ஆகும் ஆகும்இ அதற்கு அடுத்தபடியாக 38 சத வீத ஐரோப்பிய ஒன்றியம் சந்தையாகும். மிக முக்கியமானது என்னவென்றால் ஆடை தொழில்துறையில் மூன்றில் இரண்டு பங்கு பெண்களாக காணப்படுகின்றனர். இத்துறை ஒரு பாரிய தொழில்துறையாக இருப்பதால், நம் பெண் தொழிலாளர் பலத்தை மேம்படுத்துவதற்கு ஒரு உந்து சக்தியாக இருக்கும். எனவே, ஆடை தொழிற்துறை விநியோகக் கண்காட்சி போன்ற நிகழ்வுகள் நமது ஆடைத் துறையை பல வழிகளில் வலுப்படுத்துகின்றன என்பது தெளிவு.
ஜவுளி மற்றும் ஆடைத்துறையில் இலங்கை மிகவும் உச்ச நிலையில் உள்ளது. இலங்கை கைத்தொழில்துறையில் முன்னணி வகிப்பது ஆடைத்தொழிலாகும். திறந்த பொருளாதார கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின் ஆடை தொடர்பாக இலங்கை பிரதான நாடாகியது. இலங்கையின் ஆடைகள் தரமானதால் வெளிநாட்டுச் சந்தை வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது. கடந்த தசாப்தங்களில் இலங்கையின் ஆடைகளுக்கு ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளில் பெரும் கேள்வி காணப்பட்டது.
முதன் முதலாக 1998 ஆம் ஆண்டு ஆடை தொழிற்துறை விநியோக கண்காட்சி நடைபெற்றது. இன்று கொழும்பில் இந்நிகழ்வு, இலங்கையில் மற்றும் வெளிநாட்டிலுள்ள ஆடை ஏற்றுமதி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்துறை வழங்குனர்களுக்கு ஒரு பெரிய தொழிற்துறை நிகழ்வுகளாக மாறியுள்ளது.
2018 ஆம் ஆண்டிற்கான ஒன்பதாவது ஆடை தொழிற்துறை விநியோக கண்காட்சி மே மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது. இலங்கை ஆடைகளுக்கான பிரதான ஏற்றுமதி இலக்குகள் கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை (2017) நேர்மறையான ஒரு போக்கை காட்டியுள்ளன. இந்த காலகட்டத்தில், அமெரிக்காவிற்கான மொத்த ஆடை ஏற்றுமதி 1.959 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் (2016 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையில் 1.94 பில்லியன் டொலர்), ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி 1.84 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். (2016 ஜனவரி முதல் நவம்பர் முதல் 1.80 பில்லியன் வரை) இருந்தது என்று கூறினார்.