Breaking
Sun. Jan 12th, 2025

இலங்கையின் பிரதான விமான சேவை நிலையமாக காணப்படும் கட்டுநாயக்க விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக  விமான நிலைய சுதந்திர ஊழியர் சங்கத் தலைவர் பி.முகந்திரம் தெரிவித்துள்ளார்.

பிரதானமாக 5 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுள்ளது. அதாவது 10000 ரூபா சம்பள உயர்வு, வைத்திய காப்புறுதி, சேவை கடன்தொகை வழங்கல், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரியை அகற்றல், ஊழியர்களுக்கு ஓய்வு நேரம் வழங்கல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்துள்ளோம்.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அவர் அறிவித்துள்ளார். இதேவேளை வேலை நிறுத்தப் போராட்டத்தால் விமான சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post