Breaking
Mon. Nov 18th, 2024

-ஊடகப்பிரிவு- 

புதிய அரசியலைப்பில் ஒன்று இத்தேர்தலில் பின் வரப்போகின்றது. இதில் எவ்வாறான விடயங்கள் உள்வாங்கப்படவேண்டும் என்பது தொடர்பில் 06உபகுழுக்கள் உருவாக்கப்பட்டது அதில் முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கிய இன்னும் பல மு.கா முக்கியஸ்தர்களும் இருந்தார்கள். இச்சீர்திருத்தம் தொடர்பில் 70க்கும் மேற்பட்ட கூட்டங்கள் இடம்பெற்றது எமது நாட்டின் அடிப்படை சட்டங்கள் மாறும் இவ் அரசியலைப்பு திருத்த சட்டத்தில் முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பில் பேச இந்த முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒரு நபரும் கலந்துகொள்ளவில்லை கலந்துகொண்டாலும் எதையும் இவர்கள் பேச மாட்டார்கள். என முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரும்,சட்டத்தரணியுமான எம்.ஏ. அன்ஸில் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை இக்ராஹ் வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் வை.பீ. மஹ்தூம் அவர்களை ஆதரித்து நேற்று (30) இரவு இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

 அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் நடைபெற்ற 70 கூட்டங்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களும் உள்ளது, முஸ்லிம்கள் தொடர்பில் பேச இவ் முஸ்லிம் கட்சி முன்வரவில்லை என்றால் இதை விட எம் சமூகத்திற்கு இக்கட்சி செய்யும் துரோரம் என்ன..? சுமந்திரன் இது தொடர்பில் நேரடியாக விளக்கம் கொடுத்தார், ஆக நம் முஸ்லிம்களின் நிலை எங்கே சென்றுள்ளது என பாருங்கள்.!வட-கிழக்கு இணைப்பு எனது எமது முஸ்லிம் சமூகத்திற்கான அடிமைச்சாசனம் என்பதை மர்ஹூம் தலைவர் சுட்டிக்காட்டினார் ஆனால் இன்று இந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இதன்நிலையில் சற்று மாறி வட,கிழக்கு இணைப்புக்கு பச்சைக்கொடி காட்டிக்கொண்று உள்ளார். இதன் நிலை என்ன..?? சற்று சிந்தியுங்கள்.! எமது கூட்டமைப்பின் முக்கிய கொள்கைக்ளின் ஒன்று வட-கிழக்கு தனித்தனி மாகாணமே. தலைவர் அஷ்ரப் அவர்களின் கொள்கைகளுடன் அத் தலைமையும் அதன் உயர்பீட உறுப்பினர்களும் இருந்திருந்தால் நானும் வந்து வாக்கு கேட்டுஇருப்பேன். இவ்வாறு தலைவர் அஷ்ரபின் கொள்கைகள் இல்லாத இக்கட்சியும் அதன் உயர்பீட உறுப்ப்பினர்களும் எதற்காக..? ஒருமுறையாவது அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்.

அட்டாளைச்சேனைச்சேனை பிரதேசத்திற்கு இதுவரை காலமும் தராமல் ஏமாற்றப்பட்ட தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையை தராமல் இருந்தார் ஆனால் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு மயில் சின்னத்தில் களமிறங்கி அதன் செயற்பாடுகளை வெளிக்காட்டியதன் பின் அச்சமடைந்த ஹக்கீம் தனது தேர்தலில் தோல்வி அடைந்து விடுவனோ என்ற அச்சத்தில் தான் தேசியப்பட்டியலை அட்டாளைச்சேனைக்கு வழங்கி வைத்தார் இதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது

இதுவரை காலமும் அருகில் உள்ள முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் மீது வசைபாடிவிட்டுச் செல்லும் ஹக்கீம், இம்முறை வழமைக்கு மாறாக மயில் கட்சிக்காரர்களை பார்த்து விமர்சனம் செய்து விட்டு சென்ற போதே எமக்கு தெளிவாகிவிட்டது. நான் அன்று முன்னாள் அமைச்சர் நஸீர் அவர்களிடம் கூறினேன் நீங்கள் எங்களை அட்டாளைச்சேனையில் மேடை போட்டுத்தாருங்கள் கதைப்பதற்கு அதன் பின் ஹக்கீம் தானாக தேசியப்பட்டியலை தருவதற்கு முன்வருவார் என்றேன்.இன்று பாலமுனை நிலை மிக மோசமானதாக உள்ளது அது போல் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில் யானைக்கட்சி காரர்களுக்கு வாக்கு வீதம் குறைந்தளவு காணப்படுகின்றது. அவ்வாறு மக்களிடம் மிக தெளிவான விளக்கங்கள் சென்றுள்ளது.

பாலமுனையில் ஹக்கீமின் கூட்டத்தை குழப்பியதாக என் மீது மிக தவறான குற்றம் சுமத்தப்பட்டு என்னை அட்டாளைச்சேனையில் கருத்து செல்ல முடியாமல் செய்ய முயற்சி செய்கின்றனர். ஆனால் நான் அக்கூட்டத்திற்கு குழப்பச்செல்லவில்லை அங்கிருந்து எனக்கு அழைப்பு வந்தது உங்களுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றே! அதன் காரணமாகவே நான் அங்கு சென்றே ஏன் என்றால் அதற்கு முன் நான் ஒரு கூட்டத்தில் கூறினேன் என்னை உங்களை கூட்டத்திற்கு அழைத்தால் நான் முன்வரிசையில் இருப்பேன் என்று, ஆக நான் சென்றது கூட்டத்தை குழப்ப அல்ல என இம்மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்

அட்டாளைச்சேனையின் பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அவர்களும் அவரை சார்ந்த வேட்பாளர்களும் நேரடியாக வாருங்கள் இதே ஊரில் பகிரங்க மேடையில் பேசுவோம் நான் பேசுவது தவரா..?? என நீங்கள் சிந்தியுங்கள், அட்டாளைச்சேனையில் நீங்கள் என் கூட்டத்தை குழப்பினால் அதன் அர்த்தம் வேறு, அவ்வாறு நீங்கள் கூட்டத்தை தடுத்தாலும் மக்களுக்கான கருத்து இன்று மிக தீவிரமாக பரவி வருகிறதை அவதானிக்கலாம்.

நம் அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் தலைவர் அஷ்ரப் அவர்களை நமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் மிக அதிகமாக நேசித்தவர்கள் ஆனால் அது இப்போது முழுமையாக ஏமாற்று வித்தைகளும் ஹக்கீம் வளம் வருகின்றார். ஒரு தேர்தலில் தேசியப்பட்டியல் வாக்குறுதி அடுத்த தேர்தலுக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டது. ஆனால் இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் இன்னும் தாமதமாக நடந்திருந்தால் நிச்சயமாக இத்தேசியப்பட்டியலும் அதன் பிறகே கிடைத்திருந்துக்கும் அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. இத்தேசியப்பட்டியல் வாக்குறுதி நிறைவேற்றம் அல்ல மாறாக இது இத்தேர்தலில் வெற்றிகொள்ள அட்டாளைச்சேனை மக்களுக்கு வழங்கப்பட்ட இலஞ்சமே! தேசியப்பட்டியலுக்கு வாக்களிப்பதற்காக எம் மர்ஹூம் தலைவர் இக்கட்சியை உருவாக்கவில்லை மாறாக இது முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுக்க உருவாக்கப்பட்டது ஆனால் இன்று இக்கட்சி தலைமை தேசிய முஸ்லிம்களின் உரிமைகளை பெற்றுக்கொடுத்து செயற்பட்டுள்ளதாக என சற்று சிந்தியுங்கள். தேசியப்பட்டியலுக்கு வாக்களித்தால் அதைப்போல் பிழையானது வேறு எதுவும் இல்லை. உயர்பீட கூட்டம் ஒன்று இடம்பெற்றது அப்போது அக்கட்சி தலைவர் கூறுகிறார் ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் மக்கள் போராட்டம் நடத்துகின்றார்கள் இந்த 03 பாராளுமன்ற உறுப்பினர்களும் என்ன செய்கின்றீர்கள் என கேட்டார் அதற்கு பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் எழும்பி கூறுகின்றார் நீங்கள் இதுவரை காலமும் நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவை கூட்டி குறைந்தது 10நிமிடமாவது பேசி எம் கதை கேட்டுள்ளீர்களா..? என கேட்கும் நிலைக்கும் நம் கட்சி மாறியுள்ளது.

சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எதற்கு பாராளுமன்றில் கை உயர்த்துகின்றோம் எனது தெரியாதவர்களாக இக்கட்சியிக் இருக்கின்றார்கள், பிரதேச சபைக்குச் சென்று எதை செய்யவுள்ளோம் என்பவர்கள் உறுப்பினர்களாக முயற்சிக்கின்றார்கள், கோடிகள் பெற்ற கதைகள் உள்ளது இக்கட்சியில், மர்ஹூம் தலைவரின் கொள்கைகள் புதைத்த தற்போதைய தலைவரின் கதைகள் உள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

Related Post