Breaking
Sun. Jan 12th, 2025

முன்னெச்சரிக்கை விடுப்ப தற்கான ஏற்பாடுகள் சரிவரச் செயற் படாதபோது இயற்கை அழிவுகளால் பாதிக்கப்படுவர்களுக்கு மரணம் மிக வேகமாக வந்துவிடுகின்றது.

கடந்த தசாப்த காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் எதிர்கொண்ட யதார்த்தம் இது. ஆனா லும் இயற்கை இடர்களால் மக்கள் பாதிக்கப்படவேண்டியதைத் தடுக்க வேண்டிய பொறுப்பிலுள்ளவர்கள் இந்தத் தவறுகளைத் தொடர்ந்தும் செய்தவண்ணமுள்ளனர்.

உடனடி ஆபத்துள்ளதை அறியா ததாலும். அலட்சியம் செய்ததாலும் உண்டான இன்னொரு மாபெரும் துய ரம் 29ஆம் திகதி காலை கொஸ் லந்தையிலுள்ள மீரியபெத்தவில் இடம்பெற்றுள்ளது. தலைநகர் கொழும் பிலிருந்து 260 கிலோமீற்றர் தொலை விலுள்ள மலைப்பகுதி இது.
தொடர்ச்சியான மலையின் பின் னர் சுமார் 2 கிலோமீற்றர் மலைப்பகுதி அதிகாலையில் நிலமிறங்கி 66 சிறிய வீடுகளை 30 அடி ஆழமான மண் ணில் புதைத்தது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆரம்பகட்ட அறிக்கை யின்படி இங்கு 300 பேர் வரை வசித் துள்ளனர். இவர்களில் சிலர் அன்று அதிகாலையில் வேலைக்குச் சென்று விட்டனர். இந்த அனர்த்தம் நிகழ்ந்த வேளை அநேகமான குழந்தைகள் பாடசாலைகளில் இருந்திருக்கின்றனர்.

இந்தத் துயரம் நிகழ்ந்து 4 நாட்க ளுக்குப் பின்னர் 4 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், 38 பேர் காணமற்போயுள்ளனர் என அறிவிக்கப் பட்டுள்ளது. ஆரம்பத்தில் 100 என அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையில் தற்போது மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சுமார் 1,800 பேர் வரை இடம்பெயர்ந் துள்ளனர். இவர்களில் எவரும் மீண் டும் அந்த இடத்துக்குத் திரும்ப வரப் போவதில்லை.
எனினும், மண்சரிவு இந்தப் பகுதி யில் எச்சரிக்கையில்லாமல் இடம்பெற வில்லை.சுமார் ஒரு தசாப்த காலத் துக்கு முன்னரே இந்த வீடுகள் மரணப் பொறியின் மீது அமர்ந்திருப்பதாக எச்சரிக்கப்பட்டது.

2005இல் தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு இந்தப் பகுதியில் ஆராய்வு களை மேற்கொண்டு எச்சரிக்கைகளை விடுத்திருந்தது.

நாங்கள் இந்த வீடுகள் அமைந் துள்ள பகுதி ஸ்திரமற்றது, மண்சரி விற்குள்ளாகக்கூடியது என்பதைக் கண்டுபிடித்தோம். அவர்களை வேறு இடங்களுக்கு மாற்றுமாறு ஆலோ சனை வழங்கினோம் என்கிறார் அந்த அமைப்பின் பதுளையின் மத்திய மற்றும் தென்பகுதிகளுக்குப் பொறுப் பான அதிகாரி செனிவிரத்ன. மண் ணில் புதையுண்டுபோன 66 வீடுகளுக் கும் பெரும் ஆபத்துள்ளது என தாங் கள் முன்கூட்டியே எச்சரித்ததாக சில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு 6 வருடங்களுக்குப் பின் னர் இதுபோன்ற இன்னொரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வி லும் அதேமுடிவுகளே வெளியாகின. இரண்டு தடவைகளும் மக்களை அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்று மாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி னோம். அவர்கள் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டனர் என்கிறார் செனிவி ரத்ன.

இந்த அனர்த்தம் அன்று காலை 7.10இற்கு நிகழ்வதற்கு முன்னரும் ஹல்துமுல்ல பிரதேச சபைக்கு எச்ச ரிக்கை விடுத்தோம். சில கிராமத்தவர் களுக்கு இதனைத் தெரியப்படுத்தி னோம். ஆனால், அவர்கள் அனை வரும் அங்கிருந்து வெளியேறவில்லை என்கிறார் செனிவிரத்தின.
ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. எனி னும், அவை பிரதேச செயலகத்தைச் சென்றடைந்ததும் நின்றுவிட்டன. அதற்குப் பின்னர் அவை முறையாக எடுத்துச்செல்லப்படவில்லை. ஒழுங்க மைக்கப்படா ரீதியில் எச்சரிக்கை குறித்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கிறார் இலங்கை செஞ் சிலுவைக் குழுவின் முன்னெச்சரிக் கைப் பிரிவின் முகா மையாளர் இந்து அப யரத்ன. இதுவே தற் போது நிவாரண நட வடிக்கைகளை ஒருங்கி ணைக்கின்றது.

இதேவேளை, பாதிக்கப்பட்டுள்ள கிரா மத்தவர்களே அபாய சமிக்ஞைகளைத் தவற விட்டுள்ளனர். 2009 இல் அனர்த்த முகா மைத்துவ நிலையம் (இவ்வாறான நடவடிக் கைகளுக்குப் பொறுப் பான முக்கிய அரச மைப்பு) மற்றும் ஏனைய அமைப்புகளும் இணைந்து கொஸ்லாந்தை பகுதி யில் மக்களுக்கு விழிப்புணர்வையூட் டும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்தி ருந்தன.
மண்சரிவு போன்ற அனர்த் தங்களை முன்கூட்டியே கண்டுபிடிப் பதற்காகவும், தகவல்களைப் பரிமாறி மக்களை வெளியேற்றுவதற்காகவும் குழுக்களை அமைத்து செயற்படுமாறு அவ்வேளை மக்கள் கேட்டுக்கொள் ளப்பட்டிருந்தனர். அவசரமான நிலை யில் தகவல்களைப் பரிமாறுவதற்காக ஒலிபெருக்கிகள் வழங்கப்பட்டன. மழையின் அளவை மதிப்பிடுவதற் கான சாதனங்களும் வழங்கப்பட்டன.

இதுதவிர, தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு அருகிலுள்ள பாடசாலை யயான்றில் மழையை அளப்பதற்கான கருவியயான்றைப் பொருத்தியிருந் தது. ஒக்டோபர் 29ஆம் திகதி அதி காலைக்கு முன்னர் வரை 129 எம்எம் மழை பெய்திருந்ததைக் காண்பிக் கின்றது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த எவராவது அதனைப் பார்த்திருந்தால் தமக்குள்ள ஆபத்தை உணர்ந்திருக் கலாம்.
எனினும், எவரும் அபாய எச்சரிக் கையைப் பார்க்கவில்லை; அறிய வில்லை. இதனால் மண்சரிந்து வீழ்ந்த போது என்ன நடக்கின்றது என்பதை கூட அறியமுடியாதவர்களாக அதற்குள் அவர்கள் சிக்கிக்கொண்டனர்.

உண்மையான துயரம் என்ன வென்றால், அவர்கள் வேறு இடங்களுக் குச் செல்வதற்குப் போதிய அவகாச மிருந்தது. எச்சரிப்பதற்கும் அவர்களை குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்லுமாறு கேட்பதற்கும் நேரமிருந்தது என்கிறார் இலங்கை செஞ்சிலுவைக் குழுவின் முன்னெச்சரிக்கைப் பிரிவின் முகாமை யாளர் இந்து அபயரத்ன.

முன்னெச்சரிக்கைகளில்
உள்ள குறைபாடுகள்

உடனடி அபாயமுள்ள பகுதிகளில் ஏன் இத்தனை பேர் தங்கியிருந்தனர்? நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர் களின் முன்னால் உள்ள முக்கிய கேள்வியாக இது காணப்படுகின்றது.
இந்தப் பேரழிவுக்குப் பின்னர் முன்னெச்சரிக்கை செயற்பாடுகளில் காணப்பட்ட குறைபாடுகள் இனங் காணப்பட்டுள்ளன.

உள்ளூர் மக்களுக்கு முன்னெச் சரிக்கைகளை வழங்குவதற்கும், பரப் புவதற்கும், அவர்களை வெளியேற்று வதற்கும், இது குறித்த ஒத்திகைகளைக் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை முன்னெடுப்பதற்கும் உரிய அமைப் பொன்றில்லாதமை இவ்வாறான பாரிய உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டபோதி லும் மக்களை வெளியேற்றுமாறு தெளி வான உத்தரவுகள் வழங்கப்படவில்லை என ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆழிப்பேரலைக்குப் பின்னர் இலங் கையின் ஏனைய பகுதிகளில் இவ்வா றான ஒத்திகைகள் இடம்பெறுவது வழமையாகியுள்ளது.

நாட்டின் 9 மாகாணங்களிலும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் காணப்படுகின்றன. அவர்களுக்கு உள்ளூர் நடவடிக்கைகளை ஒருங்கி ணைக்குமாறு உத்தரவு வழங்கப்பட் டுள்ளது. அதேவேளை, பொலிஸாரும் படையினரும் எச்சரிக்கைகளைப் பரப் புதல் மற்றும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். 2012இல் ஆழிப்பேரலை எச்சரிக்கை யயான்று விடப்பட்டவேளை இவ்வா றான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டன. ஒவ்வொரு மூன்று மாதத் துக்கு ஒருமுறை அனர்த்த முகாமைத் துவப் பிரிவினால் ஒத்திகைகள் முன் னெடுக்கப்படுகின்றன. எனினும், மீரியபெத்தவில் இது இடம்பெறவில்லை.

மண்சரிவு இடம்பெறுவதற்கு ஒரு வார காலத்துக்கு முன்னரும் 23ஆம் திகதி பதுளையின் ஆறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டால் என்ன செய்வது என்ற ஒத்திகை இடம்பெற்றுள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக மீரிய பெத்தவில் இது இடம்பெறவில்லை.

இங்கு அவ்வாறன திட்டங்கள் எதுவும் இருக்கவில்லை. ஒருவருக்கும் எங்கு செல்வது, எப்படி செல்வது என் பது தெரியவில்லை. மிக முக்கியமாக அதற்குத் தலைமை தாங்குவதற்கு எவரும் இருக்கவில்லை என்கிறார் அதிகாரியயாருவர். அரச அமைப் பொன்று முன்னெச்சரிக்கை செய்தி களை அனுப்புவதற்கும், மக்களை வெளியேற்றுவதற்குமான திட்ட மொன்றை வைத்திருந்திருக்கவேண டும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறான பொறிமுறைகள் நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப் படுகின்றன எனக் குறிப்பிடும் அவர், தங்களுடைய தொண்டர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர் என்கின்றார். இது மிகவும் சவாலான திட்டம். ஆனால், இதனை இலங்கை வெற்றிகரமாகப் பரீட்சித்து பார்த்துள்ளது; பலனளித் துள்ளது என்கிறார் அவர்.

மண்சரிவு நிகழக்கூடிய பகுதிகளில் வாழும் மக்களின் சமூக பொருளாதார நிலையை கணக்கிலெடுக்காமல் விட்ட தும் கூட இந்தப் பகுதிக்கான அனர்த்த தடுப்புத்திட்டத்தில் காணப்பட்ட முக்கிய பலவீனமாகும்.

இந்த மக்கள் அருகிலுள்ள தேயி லைத் தோட்டங்களில் வேலை பார்த்து மிகக்குறைந்த வருமானத்தைப் பெறு பவர்கள். மண்சரிவால் அழிந்துபோன வற்றை வீடுகள் எனக் குறிப்பிட முடி யாது. அவை ஓர் அறை, நீண்ட லயன் கள் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றன.

நன்றி: சுடர் ஒளி

Related Post