-முர்ஷித் கல்குடா-
கோறளைப்பற்று மத்தி மற்றும் கிரான் பிரதேச செயலக பிரிவுகளுக்கு தனித் தனியான பிரதேச சபைகளை அமைத்து தருமாறு மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.
வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னனியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, வேட்பாளர் எம்.எப்.எம்.ஜஃபர் தலைமையில் வாழைச்சேனையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.
பிரதி அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்-
ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேச சபைகளில் அதிகப்படியான ஆசனங்களை பெற்று ஆட்சி அமைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கி இந்த பிரதேசத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் ஆணையை தாருங்கள்.
கோறளைப்பற்று பிரதேச சபையில் இருந்து கோறளைப்பற்று மத்தி மற்றும் கிரான் பிரதேச செயலக பிரிவுகளுக்கு தனித் தனியான பிரதேச சபைகளை அமைத்து தருமாறு இந்தச் சந்தர்ப்பத்தில் பிரதமரை கேட்டுக் கொள்வதோடு, பிரதேச செயலகங்களின் எல்லைப் பிரச்சனை சம்பந்தமாக எதிர்காலத்தில் நடைபெறவுள்ள நிர்ணயங்களிலே இந்த பிரதேசம் பாதிக்கப்படாத வகையில் அந்த விடயத்தை செய்து தர வேண்டியது எங்களது எதிர்பார்ப்பாகும்.
இந்த பிரதேச பிள்ளைகள் கல்வி கற்பதற்கு போதுமான வசதி கொண்ட ஒரு நூலகம் இல்லை. அந்த நூலகத்தை பெற்றுத் தர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். அத்தோடு ஒரு கலாச்சார மண்டபத்தையும் இந்த பிரதேசத்தில் பிரதமர் தலைமையில் அமைத்து தர வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.
இந்த பிரதேசமானது விவசாயத்தையும், மீன்பிடியையும் நம்பி வாழும் பிரதேசமாகும். வாகனேரி குளம் தண்ணீரை தேக்கி வைக்கக் கூடிய வசதி இல்லாத காரணத்தினால், குளத்தைப் புனரமைத்து விவசாய சமூகத்துக்கு நன்மையளிக்கும் வேலைத் திட்டத்தை பிரதமர் செய்து தருவார் என்று நம்புகின்றேன் என்றார்.
4 யுவவயஉhஅநவெள