-ஊடகப்பிரிவு-
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், நாடு தழுவிய ரீதியிலான அரசியல் பிரவேசத்தில் முக்கியமாக விளங்குவது பெண்களின் அரசியல் பங்கு பற்றுதலே ஆகும். அந்தவகையில், இம்முறை உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 60:40 எனும் விகித அடிப்படையில் வகுத்தைமைக்கப்பட்ட கலப்பு தேர்தல் ஒன்றில், பெண்களின் அரசியல் பிரவேசம் மொத்தமாக 25% கொண்டு காணப்படல் வேண்டும். குறிப்பாக, எமது பிரதேச சபை 20 உறுப்பினர்களும் 25% பெண்கள் அடங்கலாக, அதாவது 5 பெண்கள் நேரடியாக சபைக்கு தெரிவு செய்யப்படுவதனையே இங்கு சுட்டிக்காட்ட முடியும்.
பெண்கள் என்ற ரீதியில் அவர்களுக்கு என்று வகுத்தமைக்கப்பட்ட உரிமைகள், கடப்பாடுகள் என்பனவற்றை சிறப்பாக வகுத்தமைக்கும் நோக்குடனேயே, அவர்களது அரசியல் நகர்வுகள் அமையக்கூடியவையாக காணப்படும்.
இதனை மையமாகக் கொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பெண்களுக்கான கருத்தரங்கு, விளினையடி வட்டார எல்லையில் நேற்று மாலை (03) பல தாய்மார்கள், சகோதரிகளின் பங்குபற்றுதலுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் பல்கலைக்கழக உபவேந்தர் எஸ்.எம்.இஸ்மாயில், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நௌஷாட், மற்றும் சக வேட்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.