Breaking
Fri. Nov 15th, 2024

-ஊடகப்பிரிவு-

வடக்கு – கிழக்கு தமிழ் மொழி மாநிலத்தில் கிழக்கு முஸ்லிம்களுக்கு தனி மாகாண சபைக்கான ஒத்துழைப்பை தமிழ்த்தேசியம் முன்னெடுக்காது போனால் வடக்கு – கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்களின் ஆதரவு கிடைக்கமாட்டாது என்று முன்னாள் அமைச்சர் எம்.எச்.சேகு இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார்.

வடக்கையும் கிழக்கையும் இணைத்த ஒரு தமிழ்மொழி மாநிலத்தில் ஒரு மாகாண சபை ஆட்சி அதிகாரத்தையோ அல்லது சமஷ்டியையோ தமிழர்களுக்கு வழங்குவது வட, கிழக்கு முஸ்லிம்களின், குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், அரசியல் அபிலாஷைகளுக்கு முட்டுக்கட்டையாகவும் அமைந்துவிடும் என்பதில் கிழக்கு முஸ்லிம்கள் உறுதியாக இருப்பதனால் கிழக்குத் தமிழர்களின் நன்மையை கருத்திற்கெடுத்து தமிழ், முஸ்லிம் மாகாண சபைகளைக் கொண்ட வடக்குக் கிழக்கு இணைப்பு பற்றி வடமாகாண தமிழ்த் தலைவர்கள் சிரத்தையோடு சிந்தித்து முடிவுகளை எடுக்க வேண்டும்.

கிழக்கு முஸ்லிம்கள் இணைப்பை விரும்பவில்லை என்பதை முற்படுத்தி வடக்கையும் கிழக்கையும் தனித்தனி மாகாணங்களாக பிரித்த நிலையிலேயே வைத்திருக்க பிரதமர் ரணிலும் கூறியுள்ளது. மொத்த வடக்குக் கிழக்குத் தமிழர், முஸ்லிம்களுக்கும் ஒருபோதும் நன்மையளிக்கப் போவதில்லை.

கிழக்கில் மட்டுமாவது முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பில் முஸ்லிம்களுக்கென தனித்த, பிரத்தியேக முஸ்லிம் அலகினைப் பெற்றெடுக்க முனைப்போடு செயற்பட வேண்டிய பாரிய பொறுப்பு வடக்கு தமிழ்த் தலைமைகளையே சார்ந்துள்ளது. அத்தோடு வடக்கிலிருந்து தறிக்கப்பட்ட சிங்கள முஸ்லிம் பெரும்பான்மையுள்ள கிழக்கு மாகாண ஆட்சிக்குள் கிழக்குத் தமிழர்களை மனம் புழுங்கத் தனித்து தவிக்க விடுவது பற்றி கிழக்குத் தமிழ்த் தலைவர்கள் ஒள்றிணைந்து வடக்குத் தமிழ்த் தலைமைகளை வற்புறுத்த வேண்டும். இது தவறுமாயின் இதுகாலவரை வடக்குத் தலைமைத்துவத்தை ஏற்று அவர்களின் தாளங்களுக்கு ஸ்வரம் தப்பாமல் ஆடிய கிழக்குத் தமிழர்கள் கேவலமாகக் கைவிடப்பட்டு கிழக்கு சிங்கள, முஸ்லிம் மாகாண ஆட்சியை அண்டிப் பிழைக்கும் அவமான நிலைக்கே தள்ளப்படுவர்.

கிழக்கு முஸ்லிம் கட்சித் தலைவர்களுக்கு ராமன் ஆண்டாலென்ன, ராவணன் ஆண்டாலென்ன, கூடவந்த குரங்கு ஆண்டாலென்ன முஸலிம்கள் எக்கேடு கெட்டுப்போனாலென்ன, சகோதர கிழக்குத் தமிழ்த் தேசியம் சக்தியில் வீழ்ந்தாலென்ன என்ற அலட்சியம் மனோபாவத்தில், சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒத்து ஊதி, சாமரம் வீசுவதையே தமது பிரவிப் பயனாகக் கருதுவார்கள்.
எனவே, இன்று வடக்குத் தமிழ்த் தலைமைகள் தமக்காக மட்டுமன்றி, கிழக்கு மாகாணத் தமிழர்களுக்காகவும், கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்காகவும் இந்த நாட்டில் வாழும் சகல தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழர்களுக்காகவும் பக்க சாhபின்றி குரல் கொடுக்கும் கடமையை தம் தோள் மீது சுமந்தே ஆக வேண்டியுள்ளது. பெப்ரவரி 11. 2017இல் மட்டக்களப்பில் “எழுக தமிழ்” பேரணியில் கிழக்கு முஸ்லிம்களுக்கும் சமஷ்டியை நாம் வலியுறுத்துவோம் என்று விக்னேஸ்வரன் கூறியதையும், 22.04.2016இல் வட மாகாண சபையில் தீர்வு முன்மொழிவுகளில் வடக்கு கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கென தன்னாட்சி அதிகார சபை உருவாக்கப்படுமென்று கூறியதையும் நாம் நன்றியோடு நினைவில் வைத்துள்ளோம்.

விக்னேஸ்வரன் ஐயாவின் மீது எமக்கேற்ப்பட்ட நம்பிக்கை காரணமாகவும் கிழக்குத் தமிழர்மீது நமக்கு இயல்பாகவுள்ள ஒட்டுறவு காரணமாகவும், வடக்குக் கிழக்குத் தமிழர்கள் காலாநிதி காலமான தமிழ்த் தேசியப் போராட்டத்தின் மீதுள்ள மதிப்பு காரணமாகவும், வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்கு ஒரு அதிகார ஆட்சியும் பெற விக்னேஸ்வரன் ஐயாவின் தலைமையில் தமிழ்த் தலைவர்கள் ஒன்றுகூடி முன்மொழிவுகளை புதிதாக வைக்க வேண்டும் என்பதே முஸ்லிம் புத்திப் போராளிகளின் விருப்பமாகும்.

இது தொடர்பாக என்ன வேலைத் திட்டங்களிலும் இணைந்து செயற்பட நாம் தயாராய் இருக்கிறோம். முஸ்லிம்களின் தாகம் சமத்துவதாயகம் தான்.

Related Post