Breaking
Sun. Jan 12th, 2025

-ஊடகப்பிரிவு-

மன்னார் மாவட்டத்தின், முசலி பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சிக் கிளைகள் ஆரம்பித்தல் மற்றும் கிளை உறுப்பினர்களை தெரிவு செய்யும் நிகழ்வு, மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நேரடி வழிகாட்டலில், கட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்தீனின் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்றது.

 

அந்தவகையில், பிச்சைவாணிபங்குளம், 04ஆம் கட்டை, வேப்பங்குளம், பி.பி.பொற்கேணி, எஸ்.பி.பொற்கேணி, அளக்கட்டு, அகத்திமுறிப்பு, புதுவெளி, கூழாங்குளம், தம்பட்டமுசலிக்கட்டு, சிலாவத்துறை, பூநொச்சிக்குளம், பண்டாரவெளி, மணற்குளம், இலந்தைக்குளம், வெள்ளிமலை, சிறுகுளம், கொண்டச்சி, மறிச்சுக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி, ஹுனைஸ்நகர் ஆகிய இடங்களில் மக்கள் காங்கிரஸ் கட்சிக் கிளைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், கட்சிக் கிளை உறுப்பினர்களும் செயலாளர் முன்னிலையில் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் சரீப், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன், அமைச்சரின் இணைப்பாளர்களான முத்து முஹம்மத் மற்றும் இர்ஷாட் ரஹ்மத்துல்லாஹ்  ஆகியோர் உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

 

 

Related Post