Breaking
Sat. Jan 11th, 2025

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதேச வாாியாக கால்பந்தாட்டக் கழகம், கிாிக்கட் கழகம் மற்றும் இளைஞர் கழகம் போன்றவற்றை உருவாக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக, அண்மையில் அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தில் அங்குராா்ப்பண நிகழ்வொன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கொலேஐ் ஒப் ஹெல்த் சயன்ஸ் கல்லூாியின் பணிப்பாளரும், மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தருமான டாக்டர். முனாஸிக் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தாா்.

பொத்துவில் பிரதேசத்தில் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தோ்தலில் பங்குபற்றி வெற்றிபெற்ற பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கால்பந்தாட்ட மற்றும் கிாிக்கட் கழகங்களுக்கான காாியாலயத் திறப்பு நிகழ்வும், விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பும் இடம்பெற்றது. கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

Related Post