இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்பவர்கள் தேசிய அடையாள அட்டையை கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்துள்ளார்.
தேசிய அடையாள அட்டையில் விபரங்கள் சிங்களம் மற்றும் தமிழில் மாத்திரமே காணப்படுவதால் அதனை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்ல வேண்டிய தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே வெளிநாடுகளுக்கு நீண்ட காலப் பயணங்களை மேற்கொள்பவர்கள் அடையாள அட்டைகளை கொண்டு செல்வது தொடர்பாக கடுமையான நடைமுறைகளை பின்பற்றவுள்ளதுடன் வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களுக்கு இது குறித்து அறிவுறுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.