-ஊடகப்பிரிவு-
மகாவலியை மையப்படுத்திய மணல் அகழ்வை உடனடியாக நிறுத்துமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், பொலிஸாரிடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
உரிய அதிகாரிகளால் திருட்டுத்தனமாக வழங்கப்படுகின்ற மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களை உடன் நிறுத்துமாறும் பொலிஸார், பிரதேச செயலாளர்கள் கூடிய கவனம் எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஸ்பகுமார தலைமையில நேற்று முன்தினம் (20) பிற்பகல் நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு கோரினார். மேலும், “முறையற்ற மணல் அகழ்வால் கடந்த மூன்று வருட காலமாக மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ளது. அத்துடன், மணல் அகழ்வால்,” பல அனர்த்தங்களுக்கும் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
“ஒரு நாளைக்கு 800க்கும், 1000க்கும் அதிகமான மணல் டிப்பர்களில் 500லோட் மணல் எடுத்து செல்லப்படுகிறது” எனவும் குறிப்பிட்டார்.
மணல் அகழ்வை உடன் நிறுத்துமாறு கோரிக்கை
மகாவலியை மையப்படுத்திய மணல் அகழ்வை உடனடியாக நிறுத்துமாறு, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், பொலிஸாரிடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். உரிய அதிகாரிகளால் திருட்டுத்தனமாக வழங்கப்படுகின்ற மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களை உடன் நிறுத்துமாறும் பொலிஸார், பிரதேச செயலாளர்கள் கூடிய கவனம் எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.