Breaking
Sun. Jan 12th, 2025

பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் உள்ள நிலையில், ஜனா திபதித் தேர்தலில் போட்டியிடு வது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
­ ஏன் உயர் நீதிமன்றத்திடம் அவசரமாக விளக்கம் கோரியுள்ளார் எனக் கேள்வி எழுப்பிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், ஏனையோரின் கருத்துச் சுதந்திரத்தை இல்லாதொழிக்கும் வகையிலேயே இந்தச் செயல் அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ­ உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளதன் அவசரத்தையும் – அவசியத்தையும் தம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

18 ஆவது அரசமைப்புத் திருத்தத்திற்கு அமைய மேலுமொரு தவணைப் பதவிக் காலத்திற்காகத் தேர்தலில் போட்டியிடத் தடை உள்ளதா என்பது தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை எதிர்வரும் 10 ஆம் திக திக்கு முன்னர் அறிவிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஸ உயர் நீதிமன்றத்திடம் நேற்று முன்தினம் விளக்கம் கோரியிருந்தார்.

ஜனாதிபதியின் மேற்படி தீர்மானம் தொடர்பில்  நேற்று கருத்து வெளியிட்டபோதே சட்டத்தர ணிகள் சங்கத்தின் தலைவர் உபுல ஜய சூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ­ மூன்றாவது முறை போட்டியிடலாமா, முடியாதா என்பது அவரது தனிநபர் பிரச்சினையாகும். இதற்கு அவர் தனது சட்டத்தரணிகள் குழாமைக் கொண்டு ஆராய்ந்திருக்க வேண்டும். ஆனால், அவர் இது தொடர்பில் உயர் நீதிமன்றத்திடம் சட்ட விளக்கம் கோரியுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசின் உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரையில் வெளியிடப்படவில்லை. அத்துடன், ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் முடிவடை வதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளன (19.11.2016). இவ்வாறான நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ உயர்நீதிமன்றத் தின் சட்ட விளக்கத்தை இவ்வளவு அவசரமாக கோரியுள்ளதன் அவசியத்தை எம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை எனறும் சந்தேகம் வெளியிட்டார் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர்.

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ­ மூன்றாவது முறை போட்டியிடுவது தொடர்பிலும், இரண்டாவது பதவி காலத்தின் 4 வருடங்கள் பூர்த்தி செய்யப்படுவதற்கு முன்னரும் தேர்தலை நடத்துவது தொடர்பில் பல தரப்பினரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், இவர்களது கருத்து வெளியிடும் சுதந்திரத்தை இல்லாதொழிக்கும் வகையிலேயே இந்தச் செயல் அமைந்துள்ளது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார். (TKS S)

Related Post