Breaking
Sun. Jan 12th, 2025

பழுலுல்லாஹ் பர்ஹான்

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் கிழக்கின் உதயம் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் 10 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதியில் ஏறாவூர் நகர் பிரதேசத்திலுள்ள விளையாட்டு கழகங்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள், பள்ளிவாயல்கள், பாடசாலைகள் உட்பட 19 அமைப்புக்களுக்கு தேவையான உபகரணங்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

அன்பளிப்பு செய்யப்பட்ட 10 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று (07) வெள்ளிக்கிழமை ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனிபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

இதன் போது விளையாட்டு கழகங்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள், பள்ளிவாயல்கள், பாடசாலைகள் ஆகியவற்றுக்கு தேவையான உபகரணங்கள் அதன் தலைவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் சிவலிங்கம், ஏறாவூர் அபிவிருத்திக்குழு செயலாளர் எம்.எச்.எம்.மாஹிர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள், ஏறாவூர் அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர். (zn)

Related Post