-ஊடகப்பிரிவு-
வென்கலச் செட்டிக்குளம் பிரதேச சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றின.
செட்டிக்குளப் பிரதேச சபையில் இன்று மாலை (16)இடம்பெற்ற தவிசாளர், பிரதித் தவிசாளர் தெரிவின்போது தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஆசீர்வாதம் அந்தோனிப்பிள்ளை 7 வாக்குகளைப் பெற்றுத் தெரிவுசெய்யப்பட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 4 வாக்குகளும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இரண்டு வாக்குகளும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையின் 1 வாக்கும் இவருக்குக் கிடைக்கப் பெற்றன.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஜெகதீஸ்வரனுக்கு 6 வாக்குகளும், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த டெல்சனுக்கு 3 வாக்குகளும் கிடைத்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜெகதீஸ்வரனுக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் வாக்களித்தது.
பிரதித் தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த நவரட்ணம் சிவாஜினி 7 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
இவருக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 4 வாக்குகளும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 2 வாக்குகளும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையின் 1 வாக்கும் கிடைக்கப் பெற்றன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமிழ்ப் பெண் உறுப்பினரை பிரதித் தவிசாளர் ஆக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.