இராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து இலங்கை உச்சநீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யவுள்ளது.
இராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் அகஸ்டஸ், எமர்சன், வில்சன், லாங்லெட், பிரசாத் ஆகிய 5 மீனவர்களும் போதை பொருள் கடத்தியதாக இலங்கை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
இதையடுத்து மத்திய அரசு சார்பில் 5 மீனவர்களின் தூக்குதண்டனையை ரத்து செய்து விடுதலை செய்யக் கோரி இலங்கை உச்சநீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்வதாக இருந்தது. ஆனால் இலங்கையில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு 2 நாட்கள் விடுமுறை காரணமாக மத்தியரசால் மனுதாக்கல் செய்ய முடியவில்லை
இந்த நிலையில் நாளை மறுநாள் 10 ஆம் திகதி மேல் முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரியவருகின்றது.