Breaking
Wed. Nov 20th, 2024

-முர்ஷிட் கல்குடா-

முகநூலில் எழுதும் விமர்சனத்தின் மூலம் உங்களுடைய பாடசாலையின் பெயருக்கு அபகீர்த்தி வரும் அளவிற்கு நடந்து கொள்ள வேண்டாம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட மீராவோடை அல் – ஹிதாயா மகா வித்தியாலயத்தின் 11வது பரிசளிப்பு விழாவும், “ஹிதாயா” மலர் வெளியீடும் அண்மையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

வெறும் விமர்சனங்களுக்கு மாத்திரம் பேசுகின்றவர்களாக கல்வியாளர்கள் சிலர் இருப்பார்கள். சில கல்வியலாளர்கள் தங்களுடைய விடயங்களை திணித்து சொல்ல வேண்டும் என்கின்ற காரணத்திற்காக இருக்கின்றார்கள்.

சில முகநூல் மன்னர்கள் இருக்கின்றார்கள் மிகவும் அசிங்கமாக எழுதுகின்றார்கள். முகநூல் மன்னர்களிடத்தில் எனது விண்ணப்பம் எழுதுவது உங்களுடைய ஜனநாயகம், விமர்சனம் செய்யுங்கள். ஆனால் உங்களுடைய பாடசாலையின் பெயருக்கு அபகீர்த்தி வரும் அளவிற்கு நடந்து கொள்ளாதீர்கள்.

 

பாடசாலைக்கு எழுதுவதல்ல, நீங்கள் எழுதும் அந்த வசன சொற் பிரயோகங்கள், அசிங்கமாக, அறுவறுப்பான வார்த்தைப் பிரயோகங்கள் நீங்கள் படித்த பாடசாலைக்கு நல்லதாக அல்லது கெட்டதாக எடுத்துச் சொல்லப்படும். தேசியத்தில் நேர்முகப் பரீட்சைக்கு செல்வதாக இருந்தால் முதலில் கேட்பது நீங்கள் கல்வி கற்ற படசாலையின் பெயரைத்தான்.

எனவே நாங்கள் பாடசாலையில் நல்ல கல்வியலாளர்களின் வழிகாட்டலில், நல்ல பெற்றோர்களின் மடியில் பிறந்த நாங்கள் அரசியல் மற்றும் நண்பர் மத்தியில் இருந்தாலும் சரிதான் முகநூலில் எழுதும் போது வசனங்களின் கேவலம் இல்லாமல் எழுதும் பக்குவத்தை கல்குடா சமூகம் தயவு செய்து பழகிக் கொள்ளுங்கள் என்றார்.

 

 

Related Post