புனித பாப்பரசரர் முதலாம் பிரான்ஸிஸ் எதிர்வரும் ஜனவரி மாதம் 13ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
பாப்பரசரின் இலங்கை விஜயம் தொடர்பிலான பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் நோக்கில் வத்திக்கான் புலனாய்வுப் பிரிவினர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
இந்த மாத இறுதியில் வத்திக்கான் புலனாய்வுப் பிரிவினர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
பாப்பரசரர் பிரான்ஸிஸ் இலங்கையில் விஜயம் செய்யவுள்ள மருத மடு தேவாலயம் மற்றும் கொழும்பின் முக்கிய பகுதிகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் கண்காணிக்கவுள்ளனர்.
உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா, பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றனவா என்பது குறித்து ஆராயப்படவுள்ளது.
இதேவேளை, அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த வத்திக்கான் தேவாலய பிரதிநிதிகள் இலங்கை ஓர் அமைதியான நாடு என தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. (tksk)