துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை அல் மர்ஜான் மகளிர் கல்லூரியில் 05.11.2014 ம் திகதி புதன் கிழமை சம்மாந்துறை IIFAS அமைப்பின் அனுசரனையிலும் 07.11.2014 ம் திகதி வெள்ளிக் கிழமை சம்மாந்துறை செப்கோ அமைப்பின் அனுசரனையிலும் குழு முறைப் பயிற்சிப் பட்டறை மொறட்டுவை பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் அமைப்பு மாணவர்களின் பூரண வழிகாட்டல்களின் கீழ் நடாத்தப் பட்டது.
இன் நிகழ்விற்கு சம்மாந்துறையைச் சேர்ந்த கணிதத்துறையில் பல்கலைக் கழகங்களுக்கு தேர்வான 2011,2012,2013 ம் ஆண்டு மாணவர்கள் வர வழைக்கப்பட்டு பாடசாலை மாணவர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிக்கப் பட்டு ஒரு குழுவிற்கு ஒரு கணிதத்துறை பல்கலைக்கழகத்திற்கு தேர்வான மாணவர் தலைமை தாங்கி ஆண்களுக்கு ஆண்கள் அடிப்படையிலும் பெண்களுக்கு பெண்கள் என்ற அடிப்படையிலும் இப் பயிற்சிப் பட்டறை நடாத்தப் பட்டது.
இன் நிகழ்வை நடாத்திய மாணவர்களுக்கு பாடசாலை அதிபர்கள்,ஆசியர்கள் தங்களது முழு ஒத்துளைப்பையும் வழங்கியது மாத்திரமன்றி இது போன்று எதிர் வரும் காலங்களிலும் நடாத்துமாறு மாணவர்களை ஆர்வமூட்டியதும் குறிப்பிடத்தக்கது.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை
இலங்கை