Breaking
Sat. Jan 11th, 2025

ஏ.எச்.எம். பூமுதீன்

ஐரோப்பிய நாடான பிரான்ஸில் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரான்ஸ் கிளைத்தலைவராக இஸ்ஸத் ரஹ்மான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அ.இ.ம.கா வின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் முன்னிலையில் இத் தெரிவு இடம்பெற்றது.
அதே நேரம் பிரான்ஸ் கிளையின் செயலாளராக ரமழானும் பொருளாளராக ஜவாமித்தும் தெரிவு செய்யப்பட்டனர்.

உப தலைவர்களாக லாஹீர், சுயீர் மற்றும் முகம்மட் ஆகியோர் தெரிவு செய்யப்ட்டனர்.
நிர்வாகத்தெரிவை தொடர்ந்து உரையாற்றிய பிரான்ஸ் கிளையின் புதிய தலைவர் இஸ்ஸத் ரஹ்மான்  பின்வருமாறு தெரிவித்தார்.

வடமாகாண முஸ்லிம்களின் நலனுக்காகவும் இலங்கை வாழ் முழு முஸ்லிம்களினதும் கௌரவ இருப்புக்காகவும் கடந்த காலம் தொட்டு இத்தைவரை அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆற்றும் பணிக்கு நன்றிiயும் பாராட்டையும் பிரான்ஸ் கிளை சார்பாக கூற கடமைப்பட்டுள்ளோம்.

வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் எதிர்கொண்டுவரும் பாரிய சவால்களையும் தன்னந்தனியாக நின்று அதனை எதிர்கொண்டும் வரும் அமைச்சருக்கு இச்சந்தர்ப்பத்தில் விஷேடமாக நன்றிகளை கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.

அளுத்கமை முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அந்த துர்ப்பாக்கிய சம்பவத்தை கண்டித்து பிரான்ஸிலுள்ள ஐபல் டவர் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தோம். அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய பலர் இங்கு வருகை தந்திருக்கின்றார்கள்.

இலங்கையில் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்கள் மத்தியில் செல்வாக்குடனும் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கட்சியாகவும் வளரந்துள்ளதை நாம் அறிந்து உணர்ந்ததன் வெளிப்பாடே  கட்சிக் கிளை ஒன்றை பிரான்ஸில் ஆரம்பிப்பதற்கு காரணமாக அமைந்தது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எதிர்கால முன்னேற்றத்திற்காகவும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் நலன் தொடர்பிலும் நிச்சியமாக எமது பிரான்ஸ் கிளை பல ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்பதை இந்த இடத்தில் உறுதியாக தெரிவிப்பதிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் கட்சியை முன்னெடுத்து செல்ல பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் எனவும் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிளையொன்றை பிரான்ஸில் உருவாக்க முன்வந்தமைக்கும் கட்சியின் செயற்பாடுகளுக்கு வழங்கிவரும் வழங்க இருக்கும் ஒத்துழைப்புக்களுக்காக பிரான்ஸ் கிளையினர்க்கு  அ.இ.ம.கா வின் தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீன் நன்றி கூறினார்.

இந்தக் கூட்டத்தின் இறுதியில், ஐரோப்பிய நாடுகளுக்கான அ.இ.ம.கா வின் இணைப்பாளராக முயீஸ் வகாப்தீனை அமைச்சர் ரிசாத் பதியுதீன் உத்தியோகபூர்வமாக நியமனம் செய்தார்

france1.jpg2 france1 acmc1.jpg2 acmc1

Related Post