Breaking
Tue. Nov 26th, 2024

-முர்ஷிட்-

நிந்தவூர் ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலின் புதிய நிர்வாகத் தெரிவுக்கான கூட்டம் நேற்று (26) இஷாத் தொழுகையைத் தொடர்ந்து, ஜூம்மாப் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன்போது புதிய நிர்வாக சபையின் தலைவராக அல்-ஹாஜ் பாறுக் இப்றாஹிம் தெரிவுசெய்யப்பட்டார்.

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர், ஊரின் பிரமுகர்கள் சகிதமாக நேரில் சென்று, ஜும்ஆப் பள்ளிவாசலின் நிர்வாக சபையின் புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினரைச் சந்தித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

குறித்த நிர்வாகத் தெரிவுக்கூட்டத்தில், உப தலைவர்களாக அல்ஹாஜ் என். இஸ்மத் மௌலவி மற்றும் அஸ்வத் கான், செயலாளராக செட். கமால்டீன், பொருளாளராக ஏ.எல். அன்வர்டீன், உப செயலாளராக எம். கமர்டீன் மௌலவி ஆகியோர் தெரிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related Post