யாழ்ப்பாணம் பொன்னாலை சந்திக்கு அண்மித்த கடற்கரையை அண்டிய காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இருக்கின்றமை நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டது என்று வட்டுக்கோட்டை பொலிஸார் கூறினர்.
மேற்படி சடலத்தை கண்ணுற்ற பொதுமக்கள் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தந்தமைக்கமைய சடலத்தை கண்டுபிடித்ததாக பொலிஸார் கூறினர்.
சடலம் அவ்விடத்திலேயே இருப்பதாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) மல்லாகம் மாவட்ட நீதவானுடன் சென்று சடலத்தை மீட்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சில வாரங்களுக்கு முன்னர் இறந்த ஒருவரின் சடலமாக இது இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.