Breaking
Tue. Nov 26th, 2024

-முர்ஷிட்-

மக்களின் தேவை அறிந்து சேவை செய்வதில் என்றும் முன்நிற்பவருக்கு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்ய இன்னுமொரு சந்தர்ப்பத்தை பிரதியமைச்சராக, பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மீன்பிடி, நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சராக நேற்று (02) அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றார்.

இதனை அடுத்து தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் நியமிக்கப்பட்டுள்ள அனைத்து புதிய அமைச்சர்கள் , பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களையும் வாழ்த்துவதாகவும், அனைவரும் மக்களின் தேவையறிந்து மக்களுக்காக சேவை செய்ய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலிக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் என்றார்.

 

 

Related Post