-எப்.சனூன்-
அனுராதபுர மாவட்ட விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க, அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் மேற்கொண்ட முயற்சியினால், யோதஎல கால்வாயை சுத்தம் செய்யும் பணிகள் துரிதகதியில் ஆரம்பிக்கப்பட்டன.
கலாவெவ குளத்திலிருந்து விவசாய நிலங்களுக்கு நீரினை வழங்கும் “யோதஎல” கால்வாயினில், அதிகளவில் வளர்ந்திருந்த சல்வீனியா தாவரங்கள் மூலம், முறையாக நீரினைப் பெற்றுக்கொள்வதில், அப்பிரதேச விவசாயிகள் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கியிருந்தனர்.
இந்தப் பிரச்சினை தொடர்பில் தமக்குத் தீர்வொன்றைப் பெற்றுத் தருமாறு, இஷாக் ரஹ்மான் எம்.பியிடம் அப்பிரதேச விவசாயிகள் வேண்டியிருந்தனர்.
இதனை அடுத்தே, அப்பிரதேச விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க, இஷாக் ரஹுமான் எம்.பி தனது முயற்சியினூடாக, ஜனாதிபதி விசேட செயலணியினர் மற்றும் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் கால்வாயினை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.