Breaking
Wed. Nov 27th, 2024

-ஊடகப்பிரிவு-

சிங்கப்பூர் ஜனாதிபதி லீகுவான்யூ 48 மணிநேரத்தில் இனவாதத்தை தடுக்க நடவடிக்கை எடுத்தது போன்று இங்கும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

நீதித்துறை திருத்த சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் இதனை தெரிவித்தார். இதன் போது பிரதமரும் சபையில் பிரசன்னமாகியிருந்தார்.

மேலும், உரையாற்றிய அவர் குறிப்பிட்டதாவது,

வழக்குகளை துரிதமாக விசாரணை செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவை வரவேற்கிறோம். கடந்த ஆட்சியில் அன்றிருந்த ஜனாதிபதியோ, அமைச்சர்களோ, எம்.பிக்களோ அல்லது இந்த ஆட்சியில் இருக்கும் அமைச்சர்களோ, யார் தவறு செய்தாலும் துரிதமாக வழக்கு விசாரணை செய்து தண்டனை வழங்கவேண்டும்.

எம்.பிகளுக்கு இருக்கும் “கௌரவ” என்ற நாமத்தை மக்கள் மறந்து விட்டார்கள். தவறு செய்வோருக்கு துரிதமாக தண்டனை வழங்கவேண்டும்.

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக சிங்கப்பூர் பிரதமர் 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்தார். எமது பிரதமர் அடிக்கடி சிங்கப்பூர் பற்றி பேசுவார். லீகுவான்யூ செயற்பட்டதை முன்மாதிரியாகக் கொண்டு இங்கு செயற்பட வேண்டும். 18 மாத காலமே எஞ்சியுள்ள நிலையில் ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து சிங்கப்பூர் மாற்றப்பட்டது போன்று, இங்கு மாற்றம் செய்ய வேண்டும்.

225 எம்.பிக்களில் சிலர் தவறு செய்தாலும், அனைவர் மீதும் சேறு பூசப்படுகிறது. நான் எம்.பிக்களுக்குரிய சம்பளமோ, எரிபொருள் நிவாரணமோ பெறாமல் மக்களுக்கு சேவையாற்ற வந்தேன். நல்லாட்சி அரசாங்கம் தவறு செய்யும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Post