ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக களமிறங் கப்போகும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யார் என்பது தொடர்பான விசேட அறிவிப்பு இன்று விடுக்கப் படவுள்ளது. இதற்காக எதிர்க் கட்சிகள் மற்றும் சிவில் அமைப் புக்களின் முக்கிய புள்ளிகள் இன்று காலை தலைநகரில் சங் கமமாகவுள்ளனர். பல மாத காலமாக இழுபறியையும் – சர்ச்சையையும் ஏற்படுத்திவந்த பொது வேட்பாளர் விவகாரத் துக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்படவுள்ளது.
பிட்டகோட்டையிலுள்ள சோலிஸ் ஹோட்டலில் இன்று காலை 9 மணிக்கு இடம்பெறும் விசேட ஊடக வியலாளர் சந்திப்பிலேயே பொது வேட்பாளர் யார் என்பது உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. பொது வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபைத் தலைவர் கரு ஜயசூரியவை எதிரணி யினர் ஏகமனதாக தீர்மானித்துள்ள தாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இன்று உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்படவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய, முன் னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் கோட்டே நாகவிகாராதிபதி வண. மாதுலுவாவே சோபித்த தேரர், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஜன நாயகக் கட்சித் தலைவர் சரத் பொன் சேகா, முன்னாள் பிரதம நீதியரசர்க ளான கலாநிதி ´ராணி பண்டார நாயக்க, சரத் என் சில்வா உள்ளிட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் இன்று இடம்பெறும் சந்திப்பில் பங்கேற்வுள்ளனர்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தச் சந்திப்பில் பங் கேற்காது எனக் கூட்டமைப்பின் தலை வர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித் துள்ளார். பொது வேட்பாளர் தொடர் பான உத்தியோகபூர்வ முடிவு அறிவிக் கப்பட்டதன் பின்னரே தமது முடிவு அறிவிக்கப்படும் என்று அவர் குறிப் பிட்டுள்ளார்.
மேலும், ஜனாதிபதித் தேர்த லுக்கு எதிராக குரலெழுப்பிவரும் ஜே. வி.பி., பொது வேட்பாளர் முயற் சிக்கு ஆதரவளிக்கின்ற போதும், தமது முழுமையான பங் களிப்பை அக்கட்சி இதுவரை வழங்கவில்லை. இருப்பினும், ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு தமது ஆத ரவை வழங்க ஜே.வி.பி. தீர்மா னித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர் பில் கொழும்பு அரசியலில் பேச்சு கள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஜனாதி பதி மஹிந்தவை வீழ்த்துவதற்கு சரியானதொரு பொது வேட்பாள ரைக் களமிறக்கு வதற்காக பல்வேறு எதிர்ப்புகள் -பிரச்சினைகள் -உட்கட்சிப் பூசல்களுக்கு மத்தியில் எதிர்க்கட்சிகள் பல சுற்றுப் பேச்சுகளை நடத்தி வந்தன.
இந்நிலையில், கடந்த வாரம் முழுவதும் சோபித்த தேரரின் முயற்சியில், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கடையில் அடுத்தடுத்து சந்திப்புகள் இடம்பெற்றன. இந்தப் பேச்சுகளில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க முக்கிய பங்கு வகித்துள்ளார். அவரின் ஆலோசனைகளுக்கமையவே முக்கிய காய்நகர்த்தல்கள் இடம்பெற்றுள்ளன.
பொது வேட்பாளராக சோபித்த தேரர், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் பெயர்கள் பல தரப்பினராலும் ஆரம்பத்தில் பிரேரிக்கப்பட்டபோதும், இறுதியாக கரு ஜயசூரிய எம்.பியை பொது வேட்பாளராகக் களமிறக்க எதிர்க்கட்சிகளிடையே இணக்கம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
எது எவ்வாறிருப்பினும், பொது வேட்பாளர் குறித்து இன்று காலை எதிரக்கட்சிகள் அறிவித்ததன் பின்னர், ஜனாதிபதித் தேர்தலுக்கான நடவடிக்ககையில் தீவிரமாக ஈடுபடவுள்ளன. நாட்டு மக்களின் ஆதரவை பொது வேட்பாளருக்கு பெற்றுக்கொள்வதற்காக எதிர்க்கட்சிகள் பல பல வியூகங்களை வகுத்து செயற்படவுள்ளன என்று எதிர்க்கட்சிப் பிரநிதிகள் தெரிவித்தனர்.