-எப்.சனூன்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர்.ஹில்மி மஹ்ரூபின் முயற்சியில், தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள வீதிகளுக்கான மின் விளக்குகளைப் பொருத்தும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில், புனித ரமழானை முன்னிட்டு, நேற்று (13) முள்ளிப்பொத்தானை பிரதேசத்தின் ஒரு பகுதியில் உள்ள வீதிகளுக்கான மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் டாக்டர்.ஹில்மி மஹ்ரூபினால் மேற்கொள்ளப்பட்டது.
மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் இந்தப் பணிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.