குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர்.
குருநாகல் மாநகர சபை உறுப்பினரும், குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான அஸார்தீன் மொய்னுதீனின் தலைமையில், பரகஹதெனிய, அரபா பாடசாலையில் நேற்று முன்தினம் மாலை(13) இடம்பெற்ற இந்த நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவத்தகம பிரதேச சபை வேட்பாளர் முஆத் பாரூக் தலைமையிலான சுமார் 400 பேரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் குருநாகல் பிரதேச சபை வேட்பாளர் சனூஸ், ஐக்கிய தேசியக் கட்சியின் வெல்லவாய வட்டாரக் கிளை அமைப்பாளர் ராஜு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச முக்கியஸ்தர் ரிஸ்வி ஆகியோரும் இணைந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்ட கிளைத் தலைவர் ஹபீல் மௌலவி, கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் எஸ்.எல்.நஸீர், மக்கள் காங்கிரஸின் ரிதீகம பிரதேச சபை வேட்பாளர் ஆசாத் நஸீர் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்களும் பங்கேற்றனர்.
“காலத்தின் தேவை கருதி நமது சமூகம் எதிர்நோக்கும் சவால்களை கருத்திற்கொண்டு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில், அனைத்து இளைஞர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். இதன்மூலமே சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை தீர்த்துவைக்க முடியும்” இவ்வாறு குருநாகல் மாநகர சபை உறுப்பினர் அசார்தீன் தெரிவித்தார்.
(ன)