Breaking
Wed. Nov 20th, 2024

-முர்ஷித்-

மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்களுக்கும், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தலைமையில், நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று (18 ) இடம்பெற்றது.

இதன்போது இறைச்சிக்கடைகளின் சுகாதார நிலைமைகள், அறுவைக்காக மாடுகளைக் கையாளும் நடைமுறைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், மாட்டிறைச்சிக்கான விலை தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டு காரசாரமான கருத்துப் பரிமாற்றங்களின் பின்னர், எதிர்வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து நிந்தவூரில் உள்ள அனைத்து மாட்டிறைச்சிக்கடைகளிலும் 1Kg தனி இறைச்சியின் விலை 850 ரூபாவகவும், எலும்பு (100g) சேர்ந்த இறைச்சி 1kg மின் விலை 800 ரூபாவாகவும் விற்பனை செய்ய வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

கடந்த புதன் கிழமை (16) தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தலைமையிலான பிரதேச சபை உறுப்பினர்கள், சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுவினர் மாடுகளை அறுக்கும் இடமான பரவட்டான்பிட்டி மடுவம் பகுதிக்குச் சென்று, அதன் வசதிகள் மற்றும் சுகாதார நிலமை தொடர்பில் கண்டறிந்து, அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Related Post