வட மாகாண சபையினால் அமுல்படுத்தப்பட்ட கிராமிய பாலத்திட்டத்தின் கீழ் தலைமன்னாரில் அமைக்கப்பட்ட தலைமன்னார் கிராமத்திற்கான புதிய பாலம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(27-05-2018) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் சுமார் 22 மீற்றர் பாலம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வடக்கில் 87 கிராமிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் 16 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் போது விருந்தினர்களான அருட்தந்தை நவரெட்ணம் அடிகளார், வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பா.டெனீஸ்வரன், மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முஜாஹிர் மற்றும் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து பாலத்தை திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
(ஐ)