செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஏர்முனை விசேட தேவையுடையவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆடை உற்பத்தி நிலைய திறப்பு விழா நேற்று முன்தினம் மாலை (29) வந்தாறுமூலை விஷன் வளாகத்தில் இடம்பெற்றது.
அமைப்பின் தலைவர் எஸ்.கங்கேஷ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கடற்தொழில் நீரியவள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார்.
மேலும், அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.அருண்மொழி, மாவட்ட செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.செல்வநாயகம், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நான்கு இலட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் விஷேட தேவையுடையோரின் வாழ்வாதாரத்தை மேன்படுத்தும் வகையில் ஆடை உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இங்கு கடற்தொழில் நீரியவள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் சேவையை பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள விஷேட தேவையுடையோரின் வாழ்வாதாரத்தை மேன்படுத்தும் வகையில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அறுபது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-முர்ஷிட் கல்குடா-