Breaking
Wed. Nov 27th, 2024

மன்னார், முசலி, வெள்ளிமலை அபிவிருத்திக் குழுவினர் விடுத்த கோரிக்கையினை அடுத்து, கடந்த முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், வெள்ளிமலை மையவாடிக்குப் பாதை அமைக்க நிதி ஒதிக்கீடு செய்தார்.

பாதைக்கான வேலைகள் முடிவடைந்த நிலையில், மீண்டும் பொது மையவாடியினை அடையாளப்படுத்தும் நோக்குடன், கடந்த சில மாதங்களுக்கு முன் சுற்றுவேலி அமைப்பதற்கான கோரிக்கையை சம்பந்தப்பட்டவர்களிடம், அபிவிருத்திக் குழுவினர் முன்வைத்த நிலையில், தற்போது மாகாண சபையின் ஊடாக சுமார் இரண்டு இலட்சம் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த வேலைத் திட்டத்தினை பார்வையிடுவதற்காக முசலி பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் மற்றும் அபிவிருத்தி குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் நேற்று (31) அந்த இடத்துக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(ஐ)

 

 

Related Post