பொதுமக்கள் தமது ஓய்வு நேரங்களில் சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் பூங்காக்களை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே, நிந்தவூரில் அமையப்பெற்றுள்ள பூங்காக்கள் புணரமைக்கப்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தெரிவித்தார்.
புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு நிந்தவூரின் பிரதான பூங்காவையும், அதனை சூழவுள்ள இடங்களையும் அழகுபடுத்தும் வேலைத் திட்டம், தவிசாளர் தாஹிரின் தலைமையில் இன்று (14) இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிந்தவூரை பசுமை நகராக மாற்றும் திட்டங்களில் ஓர் அங்கமாகவே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்காலங்களில் இதுபோன்ற இன்னும் பல திட்டங்களை நாம் முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.
இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள், ஊழியர்கள் உட்பட பொதுமக்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
-முர்ஷிட்-