Breaking
Wed. Nov 27th, 2024

மன்னார் மாவட்டத்தின் முசலிப்பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ள வெள்ளிமலை மன்/பதியுதீன் பாடசாலை விளையாட்டு மைதானத்தின் முதற்கட்ட வேலைத்திட்டமாக மைதானத்தை செப்பனிடும் பணி இன்று (22) ஆரம்பிக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின், பணிப்புரைக்கு அமைவாக, மாகாண சபை உறுப்பினரும், வெள்ளிமலை பதியுதீன் பாடசாலையின் ஸ்தாபகருமான அலிக்கான் ஷரீப் அவர்களின் மாகாண சபை நிதியினூடாகவே இந்த மைதானத்திற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

(ஐ)

 

 

 

Related Post