மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி பிரதேச செயலகம் மற்றும் ஓட்டமாவடி செயலகப் பிரிவில் இரண்டு சமூர்த்தி கிராமங்களை தெரிவு செய்து மக்களின் தேவைகளை தீர்த்து வைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அந்த வகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை பகுதிகளில் உள்ள சமுர்த்தி பயனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையிலான கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் சமுக வலுவூட்டல் அமைச்சர் பி.ஹரிசன், கடற்றொழில் நீரியல்வள மற்றும் கிராமிய பொருளதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.றுவைத், அமைச்சின் உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சமுர்த்தி பயனாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாக கேட்டறிந்து கொண்ட சமுக வலுவூட்டல் அமைச்சர் பி.ஹரிசன் அவற்றுக்கு உடனடியாக தீர்வுகளையும்; வழங்கி வைத்துள்ளார்..
-முர்ஷித். கல்குடா-