ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்று திறனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் முந்திரயம் பருப்பு வியாபாரம் செய்வதற்கான பொருட்கள் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.சத்தியானந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் அதிதிகளாக அமைச்சரின் இணைப்பாளர்களான ஜோன் பாஸ்டர், திருமதி.ஜெ.மீனா, எஸ்.ஜெகன், எம்.எஸ்.எம்.றிஸ்மின் உட்பட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சின் நான்கு இலட்சத்து எழுபத்தையாயிரம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் முந்திரயம் பருப்பு வியாபாரம் செய்வதற்கான பொருட்கள் கையளிக்கப்பட்டது.
அத்தோடு கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஆறு மாத கால தையல் பயிற்சியை முடித்த பதினாறு யுவதிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.