Breaking
Sat. Nov 16th, 2024

இலங்கைக்கு இந்திய அரசாங்கத்தினால் தொடர்ந்தேர்ச்சியாக பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதற்காக இலங்கை அரசாங்கமும் நாட்டு மக்களும் இந்திய அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்களின் சுகாதார நலனைக் கருத்திற் கொண்டு இந்திய அரசாங்கத்தினால் மூவாயிரத்து நானூறு மலசலகூடங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் இன்று (வியாழக்கிழமை) இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதி அமைச்சர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்.

நாட்டில் ஏற்பட்டிருந்த யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் போன்றவற்றுக்குப் பின்னர் இந்திய அரசாங்கம் பல்வேறு உதவித்திட்டங்களை எமது நாட்டுக்கு வழங்கி இருக்கின்றது. எமது நாட்டுக்கு ஐம்பதாயிரம் வீடுகளை வழங்கியுள்ளார்கள். பாடசாலைகள் அமைத்தல்இ வைத்தியசாலைகள் அமைத்தல்இ மழை நீரைத் தேக்கி உற்பத்தியை மேம்படுத்தல் திட்டம் மற்றும் நாட்டிலே எல்லா பிரதேசங்களுக்கும் நோயாளிகளை எடுத்துச் செல்கின்ற அம்புலன்ஸ் திட்டத்தினையும் அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.

அதேபோன்று இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற வேலைத்திட்டத்திற்கமைய முந்நூறு மில்லியன் ரூபா செலவில் மூவாயிரத்து நானூறு மலசலகூடங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. மிக விரைவிலே கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கூடாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆலயத்திற்கூடாகவும் இவ்வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்காக இந்திய நாட்டு அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் இச்சந்தர்ப்பத்திலே நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து மற்றும் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டீ.கே. ரேணுகா ஏக்கநாயக்க ஆகியோருக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இடம்பெற்றது. இதனடிப்படையில் இந்திய நாட்டின் முந்நூறு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மூவாயிரத்து நானூறு மலசலகூடங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அமைக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகத்தின் உதவித் தூதுவர் அரிங்தம் பக்ச்சிஇ அமைச்சின் மேலதிகச் செயலாளர் எஸ். சேனாநாயக்கஇ திட்டப் பணிப்பாளர் திருமதி. ஏ.டீ. தஹநாயக்கஇ பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எஸ்.எம். தௌபீக் மற்றும் இவ்வேலைத்திட்டத்திற்கான திட்ட இணைப்பாளர் ஏ.எச்.எம். அன்வர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related Post